A letter to the World – Tamil (2)

நிலாவை நோக்கி என் கனவுகள்

இரண்டு மூன்று நாட்கள் தூக்கங்களை தொலைத்து தன் கதையை முடித்த பின் நிம்மதியாய் தூங்கலாம் என நிலா தன் அறைக்கு வந்தாள். கட்டிலில் சாய்ந்தவள் மனதுக்குள் அவ்வளவு மகிழ்ச்சி. திடீரென ஒரு ஒரு ஒளி விட்டு விட்டு மின்னிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். என்னவா இருக்கும் என ஜன்னலைத் திறந்தவள் அதிர்ந்து போனாள். சில்லென்று காற்று அவள் உடலை தீண்ட, தினமும் அவள் ரசிக்கும் நிலா அதே நிலா, அதே விண்பூக்கள், அதே இருள், அதே தனிமை ஆனால் மனம் நிறைய மகிழ்ச்சி. தூறிக் கொண்டிருந்த சாரல் மழைத்துளியாய் மாறி மண்ணை நனைத்துக் கொண்டிருந்தது அவளால் அவ்விருளில் அதை பார்க்க முடியவில்லை ஆனால் நுகர முடிந்தது. நிறைய மின்மினிப்பூச்சிகள் தன் வீட்டைத் தாண்டி போவதைக் கண்டாள். என்னவாயிருக்கும் என்று யோசனையின் போது அவளுக்கு பிடித்த காபியை மீரா கொண்டுவந்து கொடுத்தாள். மீரா அபிநயாவின் தங்கை. “இப்போ நிலா மட்டும் இருந்தா எவளோ நல்லா இருக்கும்?!” என எண்ணியவள் அதிரும்படி தொலைபேசி ஒலித்தது  வேறு யாராய் இருக்கும்? அவளது நிலவே தான்! தொலைபேசி “பூசணிக்கா” என அழைப்பை காட்டியது.

“ஹலோ நிலா, என்ன பண்ணற? ”
“ஹாய் அபி, எங்க வீட்டுல இன்னைக்கு பலகாரம் பண்ணினோம், உன் ஞாபகம் வந்திச்சி அதான் call பண்ணினேன். அதுசரி நீ என்ன பண்ணற? ”
“நா நிலா பாக்குறேன் டி, நீயும் பாரேன் எவ்வளோ அழகா இருக்குனு”
“அப்டியா நிலா அழகா தான் இருக்கும் என் பேருல அதுக்கு, அதான் ஹாஹாஹா”
“கடவுளே, இந்த வானத்த பாக்குறப்போ உனக்கு என்ன நிலா தோணுது? ”
“அதுவா நாம ஒன்னா அக்கா வீட்டுல இருந்தோம் அதான் ஜாபகம் வருது, ஒன்னா நைட் மொட்டைமாடில பேசிட்டு இருந்தோம் விடிய விடிய. திரும்பவும் முடியுமா அபி? ”
“ஆமா நிலா, எவ்வளோ அழகான நினைவு அது? கண்டிப்பா முடியும் இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே சரி ஆகிரும் அப்புறம் திரும்பவும் நம்ம பாக்கலாம், மொட்டைமாடி போலாம்” என்றாள் அபி.
“இன்னைக்கு news பாத்தேன் அபி, கொழும்புல இருந்து பாக்குறப்போ சிவனொளிபாதமலை தெரியுதாம், பொய்யா இருக்குமோ டி?”
“இல்ல நிலா, அது உண்மையாம் நம்மால வீட்டுக்குள்ள இருக்கதால புகை இல்ல சூழல் அழகா இருக்கு, திரும்பவும் தூய்மையா இருக்கு அதான் உண்மை.”
“நீ சொல்லறத்தும் சரி தான் அபி, வீட்டுல இருக்கதும் எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஹாஸ்டல்ல இருக்கப்போ அம்மா, அப்பா கூடவே இருந்திரலாம்னு தோணும், இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.”
“நானும் தான் நிலா, நெறைய பேர் வீட்டுல இருந்தாலும் பேசிக்கிறது குறைவு, எல்லாரும் வேலை, வேலைனே இருப்பாங்க, இல்ல போன் பாத்துட்டு இருப்பாங்க, இப்போ அது எல்லாமே குறைஞ்சிருச்சி. இப்போ நெறைய பேசுறோம் எல்லாரும் சேர்ந்து ஒன்னா இருந்து சாப்பிடறோம், நா நினைச்சதுலா இப்போ தான் நடக்குது நிலா.”
“ஆமா அபி எவ்வளோ மாற்றம் எந்த 30 நாள்ல? போன் தான் உலகம்னு இருந்த என் தம்பிகே அது புடிக்கலையாம். ஹாஹாஹா”
“உண்மை தான் நிலா, ஆனா நெறைய பேர் இந்த நாட்கள்ள நல்லா தூங்குறாங்க, சாப்பிடறாங்க, பொழுது போக்குறாங்க, ஆனா அதுல என்ன use இருக்குனு யோசிச்சி பாரேன். நா வரைய start பண்ணிட்டேன், அப்புறம் என் பழைய கனவு டான்ஸ் அதையும் start பண்ணிட்டேன், நீ என்ன பண்ணற? ”
“நானும் நீ சொன்ன மாதிரி தான் தூங்கி, சாப்பிட்டு இருந்தேன் என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சிட்டு இருந்தேன்.”
“உனக்கு வயலின் வாசிக்க புடிக்கும் தானே u-tubeல தேடி பழகு நிலா”
“அது சரி தான் அபி ஆனாலும் இப்படி வீட்டுக்குள்ளேயே அடஞ்சி இருக்கது மனசுக்கு கஷ்டமா இருக்கு அபி”
“எதுவும் யோசிக்காத நிலா எல்லாமே கொஞ்ச நாள் தான். நம்ம ஏன் அடஞ்சி இருக்கோம்னு நீ நினைக்கிற? உடல் மட்டும் தான் வீட்டுக்குள்ள இருக்கு நிலா, நம்மளோட எண்ணங்கள், கனவுகள், ஆசைகள் எல்லாமே சுதந்திரமா பறக்கலாம். வீட்டுக்குள்ளேயே இருந்து படி, விளையாடு, சண்ட போடு திரும்பவும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது நிலா ”
“என்ன டி இதை போய் வாய்ப்புனு சொல்லற? ”
“ஆமா நிலா, அதான் உண்மை திரும்பவும் ஓடி, ஓடி அர்த்தமே இல்லாத இயந்திர வாழ்க்கைதானே வாழ போறோம்? அதுக்கு இப்போ கிடைச்சிருக்க நாட்கள்ள சந்தோஷமா குடும்பத்தோட இருக்கலாமே. வானத்தை பாரு நிலா புரியும், எங்கேயோ இருக்க நட்சத்திரங்கள் எல்லாம் உன்ன பாத்து கண்ணடிக்கும், எவ்வளோ இருட்டுலயும் பிரகாசமா அந்த நிலா என் நிலாவ பார்த்து சிரிக்கும். என்ன பொருத்தவரைக்கும் நா ரொம்பவே சுதந்திரமா, சந்தோஷமா இருக்கேன். இந்த phone networks free call ஆஹ் குறைச்சிருந்த இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்”
“ஏன் டி அதுல என்ன கஷ்டம் உனக்கு?”
“Free callல தானே இவ்வளோ நேரம் பேசுற? என் காபி வேற ஆறி போச்சி ”
“Call அ cut பண்ண சொல்றீங்களா மேடம்?”
“புரிஞ்சிருச்சா? ஹாஹாஹா,”
“……………………….”
“என்ன பேச மாட்டிக்கிற? கோவமா? அப்டிலாம் ஒன்னும் இல்ல நிலா, உன்னோட பேசுறது தான் என் சந்தோஷமே.சும்மா சொன்னேன்”
“எனக்கு தெரியும் என் அபியை பத்தி ஆனா என்ன அம்மா கூப்பிடறாங்களே?!”
“நீ போ நிலா, நாளைக்கு பேசலாம்”
“சரி அபி, bye டி ”
“Bye நிலா…………”

ஆறி போயிருந்தாலும் அம்மாவின் காபி அபிக்கு பிடிக்காமல் போகவில்லை, அதே தென்றல் தீண்ட வெள்ளிடையில் மூழ்கிபோகின்றாள் அபி.

இந்த சுயதனிமைப்படுத்தல்களும், ஊரடங்கு சட்டங்களும் பௌதீக உடலுக்கு மட்டுமே. எம் எண்ணங்களும், உணர்வுகளும் இன்னும் சுதந்திரமாய் சுற்றித் திரிய வேண்டியவை. இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் வருமா என தினமும் எண்ணி  பார்க்கின்றேன். எத்தனை எதிர்மறை விளைவுகள் இருந்தாலும் அதையும் தாண்டி நாம் நேர்மையாக சிலவற்றை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எண்ணம் போல் வாழ்க்கை அவ்வளவுதான்.

Picture source: https://images.app.goo.gl/GeRJ5g3npZPCmzbUA

Comments are closed.